×

வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் உள்ள ஸ்ரீ துலக்கானத்தம்மனுக்கு 8 நாள் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது.  கடந்த 21ம் தேதி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இரவு ஊர் கூடி பொங்கல் வைத்தனர். பிறகு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அடிதண்டம் போடுதலும், 9 மணிக்கு உடம்பில் கொக்கி குத்தி ரதம் இழுத்தலும், 11 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், மதியம் 1.30 மணிக்கு அம்மன் தாய் வீடு படையலுக்கு குளக்கரைக்கு செல்லுதலும், மாலை 6 மணிக்கு தீச்சட்டி எடுத்தலும், இரவு 7 மணிக்கு பக்கோர் குத்துதலும் நடைபெற்றது. பிறகு மலர் அலங்காரத்தில அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இந்த விழாவில் பாமக மாநில நிர்வாகிகள் வ.பாலா, சுனிதா பாலயோகி, நா.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ராணி வெங்கடேசன், மணவூர் சே.பூபதி, எஸ்.எஸ்.மோகன்குமார், ஒன்றிய கவுன்சிலர் பா.யோகநாதன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் பி.தேவன், எல்லப்பர், மதுரை, ஆர்.வெங்கடேசன், மதுரை, எஸ்.வெங்கடேசன், எட்டியப்பன், டி.வெங்கடேசன், கண்ணன், கோபால், முரளிகிருஷ்ணன், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

* கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேர் திருவிழா
பொன்னேரி திருவாயர்பாடியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று அலங்கரிக்கபட்ட திருத்தேரில் கரிகிருஷ்ணபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த விழாவில், திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என உச்சரித்துக் கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

The post வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Venkathur Kandigai Festival ,Dulukanthamman Temple ,Thiruvallur ,Sri Thulakanthamman ,Venkathur kandigai ,Sri ,Karpaka Vinayagar Temple ,Goddess ,Venkathur Kandikai Dulukanthamman Temple Festival ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்